பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஒருவராக ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின் நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் முடிவெல்லைக் கோடு ஒன்றையும் போட்டு குறித்து வைத்திருக்க வேண்டும்.

17-வது விளையாட்டான எடுத்தோடும் ஆட்டத்திற்குப் போட்டிருக்கும் வட்டம் போலவே, இந்த ஆட்டத்திற்கும், வட்டத்திற்குப் பதிலாக 5 அடி இடைவெளியில் சிறு கரளா கட்டையை (Indian Club) நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, முதலாவது ஆட்டக்காரர் ஒரு கட்டையைச் சுற்றிலும் இடையிடையே குறுக்கு நெடுக்காக ஓடத் தொடங்கி முடிவெல்லைக் கோட்டை அடைந்து, அங்கிருந்து திரும்பி வரும் பொழுதும் அதேபோல் ‘இடம் வலம்’ என்று சுற்றியவாறு ஓடத் தொங்கும் கோட்டை அடைந்து, தனக்கு பின்னால் நின்ற இரண்டாம் ஆட்டக்காரரைத் தொட வேண்டும்.

இவ்வாறு ஒரு குழுவைச் சேர்ந்த எல்லா ஆட்டக்காரரும் ஓட வேண்டும். எந்தக் குழுவின் கடைசி ஆட்டக்காரர் முன் விளக்கியவாறு ஓடி முடித்து, முதலாவது ஆளாக ஓடத் தொடங்கும் கோட்டைக் கடந்துவிடுகிறாரோ, அவரது குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

குறிப்பு: தொடுபவர்கள் ஓடத் தொடங்கும் கோட்டைக் கடந்த பிறகே, தன் குழு ஆட்டக்காரரைத் தொட வேண்டும்.

எக்காரணத்தை முன்னிட்டும் கோட்டைக் கடந்தும், தொடப்படுவதற்கு முன்னும் ஓடக்கூடாது. முடிவெல்லைக் கோட்டை நன்கு முழுதும் கடந்த பிறகே ஓடி வர வேண்டும்.