பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

41


20. ஓடி எறியும் ஆட்டம்

(Run and Throw Relay)


ஆட்ட அமைப்பு:ஆட்டக்காரர்களைச் சம எண்ணிக்கை அளவில் 4 குழுவினராகப் பிரிக்க வேண்டும்.

முன் ஆட்டங்களில் விளக்கியிருப்பது போல, ஓடத் தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டு அதன் பின்னே பிரிக்கப்பட்ட எல்லாக் குழுவினரும் ஒருவர் பின் ஒருவராக நிற்பது போல ஒரே வரிசையாக நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக நிற்கும் ஆட்டக்காரர்களிடம் ஒரு பந்து கொடுக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு எதிரே 10 அல்லது 15அடி தூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறித்து வைத்து, முடிவெல்லைக் கோடு ஒன்றினையும் குறித்து வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலி கொடுத்தவுடன் பந்தை வைத்திருக்கின்ற நான்கு குழுவின் முதல் ஆட்டக்காரர்கள் அனைவரும், எதிரே உள்ள பந்தெறியும் கோட்டை (Throwing line) நோக்கி ஓட வேண்டும். ஓடி அந்தக் கோட்டை கடந்த பிறகு, அந்தக் கோட்டை மிதிக்காமல் நின்று தன் குழுவைப் பார்க்க வேண்டும்.

அங்கு நின்று கொண்டே, தன் குழுவிலுள்ள 2-வது ஆட்டக்காரருக்குப் பந்தை எறிய வேண்டும்.

தனக்கு எறிகின்ற பந்தை, தான் நிற்கின்ற கோட்டைக் கடந்து வந்து எந்த ஆட்டக்காரரும் பிடிக்கக் கூடாது.

அவ்வாறு பிடித்துக் கொண்ட 2-ம் ஆட்டக்காரர், பந்தை எடுத்துக் கொண்டு பந்தெறியும் கோட்டிற்கு