பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


உடனே திரும்பி அங்கிருந்து தன் குழுவின் 3-ம் ஆட்டக்காரருக்கு எறிய வேண்டும்.

இவ்வாறு பந்தைப் பிடித்தவர்கள் உடனே பந்தெறியும் கோட்டிற்கு ஓடி அங்கிருந்து எறிய வேண்டும். இவ்வாறு ஓடத் தொடங்கும் கோட்டிற்கு முன் நின்ற குழுவினர் அனைவரும் பந்தெறியும் கோட்டிற்குப் பின்னால் வந்தவிடுவார்கள்.

பந்தெறிந்துவிட்டு சற்று பின்னால் ஆட்டக்காரர் நகர்ந்து நின்று, பந்தைக் கொண்டு ஓடி வருபவர் கோட்டின் முன்னே நின்று எறிய, வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு பந்தெறியும் கோட்டை எந்தக் குழு ஆட்டக்காரர் முதலில் கடந்து வந்து பந்துடன் நிற்கிறாரோ அவரது குழுவே வென்றதாகும்.

குறிப்பு: பந்தைத் தவற விட்டுவிட்டால் தவற விட்டவர்தான் பந்தை ஓடிப்போய் எடுத்து வந்து கோட்டிற்குப் பின்னால் சென்றே பந்தை எறிய வேண்டும்.

கோட்டினை பந்து பிடிக்கும் சமயத்திலும் சரி, எறியும் நேரத்திலும் சரி மிதிக்கவோ கடக்கவோ கூடாது.


21. வளையப் பந்தாட்ட எறி ஆட்டம்

(Variation with Tenikoit)


ஆட்ட அமைப்பு: 20-வது ஆட்டத்திற்குரிய குழுவின் அமைப்புபோல்தான்.

பந்துக்குப் பதிலாக வளையம் இங்கே பயன்படுத்தப் படுகிறது.