பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

45


24. வணக்கம் ஐயா வணக்கம்

(Good Morning Tag)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்கள் அனைவரையும் கைகோர்த்துக் கொண்டு ஒரு பெரிய வட்டமாக நிற்கச் செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை விரட்டித் தொடுபவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆடும் முறை: தேர்ந்தெடுக்கப்பட்டவர், வட்டத்திற்கு வெளிப்புறமாக வந்து நின்று, விசில் ஒலிக்குப் பிறகு, வட்டத்தைச்சுற்றி ஓட ஆரம்பிக்க வேண்டும். ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே, வட்டத்தில் நின்று கொண்டிருக்கும் ஒருவரின் ஒருவரின் முதுகை தட்டிவிட்டு ஓட வேண்டும்.

தட்டப்பட்டவர் தொட்டவர் ஓடும் திசைக்கு எதிர்ப்புறமாக ஓடி சுற்றி வர வேண்டும். அவ்வாறு வரும்போது இரண்டுபேரும் ஓரிடத்தில் சந்திப்பார்கள். அவ்வாறு சந்தித்தவுடன், இருவரும் கைகளைக் குலுக்கி, வணக்கம் ஐயா வணக்கம் என்று கூறி மூன்று முறை கை குலுக்கி வணக்கம் சொல்லி ஓட வேண்டும்.

மூன்றாவது முறை வணக்கம் சொல்லி கை குலுக்கியவுடன் உடனே ஓடி வட்டத்தில் இருக்கும் ஆள் இல்லாத இடத்தை (Gap) நோக்கி இருவரும் ஓட வேண்டும்.

யார் முதலில் அந்த இடைளிெ இடத்தில் போய் நிற்கிறாரோ அவர் வட்டத்தில் நிற்கும் ஒருவராகி விடுகிறார். இரண்டாவதாக வந்து இடமில்லாது ஏமாந்து போனவர், தொடுபவராக மாற ஆட்டம் தொடரும்.