பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

47


பந்தைப் பிடித்திட(it) என்று ஒருவரைத் தனியாளராக வட்டத்தின் உட்புறத்தில் முதலில் நிற்கச் செய்ய வேண்டும்.

ஆடும் முறை: வட்டத்தில் நிற்பவர்களில் ஒருவரிடம் உள்ள பந்தை, அவர்களுக்குள்ளே மாற்றிக் (pass) கொள்ள வேண்டும். பக்கத்தில் உள்ளவரிடம் பந்தைத் தரலாம். அல்லது எதிரே நிற்பவரிடம் பந்தைத் தூக்கி எறியலாம்.

அவ்வாறு இவர்களுக்குள்ளே எறிந்து கொள்கின்ற பந்தைப் பிடிக்க, உள்ளே நிற்பவர் முயற்சிக்க வேண்டும். பந்தைத் தொடலாம் அல்லது பிடிக்கலாம். அவர் பந்தைப் பிடிக்கும்போது பந்தை எறிந்தவர் யாரோ அவரே வட்டத்தின் நடுவில் நின்று பந்தைப் பிடிப்பவராகிறார்.

குறிப்பு: வட்டம் பெரியதாக இருந்தால், பந்தைப் பிடிக்க இரண்டு அல்லது மூன்று பேர்களைக்கூட வைத்துக் கொண்டு ஆடலாம்.

பந்தை இங்குமங்குமாக எறிந்து, நடுவில் உள்ளவரை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் அதனைக் குரங்காட்டம் என்று கூறுகின்றார்கள். அதனால்தான் இதற்குக் குரங்குப பந்தாட்டம் என்று பெயர் கொடுத்திருக்கிறோம்.

பந்தை தூரத்தில் உள்ளவர்களிடம் எறிந்து வழங்கும்போதுதான் இதுபோன்ற ஏமாற்றம் ஆட்டம் சுவையாக அமையும்.

26. நான்கு முனை ஆட்டம்

(Four Corners)

ஆட்ட அமைப்பு: 40 மாணவர்களிலிருந்து 60 மாணவர்கள் வரை இந்த ஆட்டத்தில் ஈடுபடுத்தலாம்.