பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(முன்னுரை) கூடி உறவாடி குதூகலமாக விளையாடி மகிழ்வதற்கேற்ற சிறு விளையாட்டுக்களை (Minor Games) தெளிவாக ஆடிக்களிக்க, விளக்கமாக எழுதப் பெற்றிருக்கிறது இந்த ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள் எனும் இந்நூல். கட்டாய உடற்கல்விப் பாடத் திட்டத்தில் குறிக்கப்பட்டு, வகுப்புவாரியாகத் தொகுக்கப் பெற்றிருக்கும் சிறு விளை யாட்டுக்கள் அனைத்தும் இந்நூலில் இடம் கொண்டுள்ளன. ஆடுவதற்கேற்ற இட அமைப்பு, ஆட்டத்தில் பங்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆடுவதற்குரிய அடிப்படை விதிகள், அவசியமான குறிப்புரைகள் போன்ற முறைகள் எல்லாம், விளையாட்டை விளக்கிக் கொள்ளவும், ஐயமின்றி நடத்திச் செல்லவும் பயன்படும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு விளையாட்டிற்கும் முதலில் தமிழ்ப் பெயரும், அதன் அருகிலே அதற்குரிய ஆங்கிலப் பெயரும் கொடுக்கப் பட்டிருக்கிறது. விளையாட்டின் முழுக்கருத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பது போலவே, தமிழ்ப் பெயர்கள் தரப்பட்டிருக் கின்றன. நேராக மொழியாக்கம் இல்லாது, நிறைவான தமிழிலே பெயர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, Crows and Cranes என்ற ஆட்டத்திற்கு காக்கைகளும் கொக்குகளும் என்றுதான் கூற வேண்டும். ஆனால், இவ்வாறு தமிழில் கூறினால், ஆட்டத்தை நடத்தும்போது, தடுமாறிப் போய்விட வேண்டாம் என்பதால், இதற்கு ஆனையும் ஆமையும் என்று புதிதாகப் பெயர் தந்திருக்கிறோம். விளக்கத் திற்கு, அந்த விளையாட்டிலேயே எழுதியிருக்கிறோம். இதுபோல் பலப்பல பெயர்கள்.