பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

49


எந்தக் குழுவினர் அதிகமாகத் தொடப்படாமல், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றனரோ அந்தக் குழுவினரே வென்றதாக அறிவிக்கப்படுவார்.

குறிப்பு: விரட்டித் தொடுபவரால் தொடப்பட்டால், தொடப்பட்டவர் ஆட்டமிழந்து போவதால், அவரிடம் தொடப்படாமல் ஓட வேண்டும். அதுவும் அந்தச் சதுரக் கட்டத்திற்குள்ளேதான் ஒட வேண்டும். ஓடும்போதே அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதிலே வேறொரு ஆட்டமுறையும் உண்டு. தொடப்பட்டவர்கள் எல்லோரும், விரட்டித் தொடுபவர்களாக மாறிவிட அவர்கள் அனைவரும் அந்த கட்டத்தின் மத்தியில் நின்றுகொண்டு ஆடுவார்கள். ஒருவருக்குப் பதிலாக விரட்டித் தொடுபவர்கள் பலர் இருந்து ஆடுகின்ற ஆட்டமுறையால், ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாகவும் அமைந்துவிடும்.

27. துணிந்து செய்

(Do or Die)

ஆட்ட அமைப்பு: எல்லா மாணவர்களையும் இந்த ஆட்டத்தில் ஈடுபடுத்தலாம். விளையாடும் இடம் பரந்த மைதானமாகக் கூட இருக்கலாம். அல்லது, பள்ளியில் இருக்கின்ற ஆடுகளம் முழுவதையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாணவர்களாகிய ஆட்டக்காரர்களை சமமான எண்ணிக்கையுள்ள இரண்டு குழுவினர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். 10 அடி இடைவெளியில் இரண்டு கோடுகளைக் கிழித்து ஒவ்வொரு கோட்டின் மேலும் ஒவ்வொரு குழுவை நிறுத்தி வைக்க வேண்டும்.