பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

53


முன்புறமாக நின்று கொள்ள வேண்டும். அதேபோல் குழுவில் இருக்கும் பிடிப்பவர்களுக்கு முன்னே போய் 1-ஆவது குழுவில் உள்ள மீதி 10ஆட்டக்காரர்கள் நின்று கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஆட்டக்காரர்களின் அமைப்பு இது போல் அமைந்திருக்கும்.

1-ஆவது குழுவின்10ஆட்டக்காரர்கள் பந்தைப் பிடிக்க அவரவருக்குரிய 3 அடி விட்டமுள்ள வட்டத்தில் நிற்கிறார்கள்.

2-ஆவது குழுவின் காப்பாளர்கள் அவர்களுக்கு முன்னே நிற்கிறார்கள். 1-ஆவது குழுவின் காப்பாளர்கள் 2-ஆவது குழுவின் பிடிப்பவர்களின் முன் நிற்கிறார்கள். 2-ஆவது குழுவின் 10 ஆட்டக்காரர்கள் பந்தைப் பிடிக்க, அவரவர்களுக்குரிய 3 அடி விட்டமுள்ள வட்டத்தில் நிற்கிறார்கள்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பின் 2-ஆவது குழுவின் காப்பாளர்களில் ஒருவர் வட்டத்தில் நிற்கும் குழுவின் பந்து பிடிக்கும் ஆட்டக்காரர்களில் ஒருவருக்குத் தன் கையில் உள்ள பந்தைத் தூக்கி எறிவார்.

யாருக்காகப் பந்தை எறிகின்றாரோ, அந்த வட்டத்தில் நிற்கும் ஆட்டக்காரர் வட்டத்திற்கு வெளியே வந்து விடாமல் பந்தை பிடிக்க வேண்டும். அதேநேரத்தில் அவருக்கு முன்னால் நிற்கிற 1-ஆம் குழுக் காப்பாளர் அவரைப் பந்தைப் பிடிக்க விடாமல் தடுக்கலாம். ஆனால் வட்டத்திற்குள்ளே (காலை வைக்காமல்) செல்லாமல் தான் தடுக்க வேண்டும்.

தடுத்த போதும் கூட பந்தை வட்டத்தில் இருப்பவர் பிடித்துவிட்டால் 2-ஆவது குழுவிற்கு 1 வெற்றி எண்