பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


(point) கிடைக்கும். பிடிக்காமல் விட்டால் யாருக்கும் வெற்றி எண் இல்லை.

அதேபோல் 1ஆம் குழு காப்பாளர்களில் ஒருவர் தன் பிடிக்கும் ஆட்டக்காரர் ஒருவருக்குப் பந்தை எறிய முன்போலவே 2-ஆம் குழு காப்பாளர்களில் ஒருவர் பந்தைப் பிடிக்காமல் தடுக்க இப்படியே ஆட்டம் தொடரும்.

20 ஆட்டக்காரர்களும் இதேபோல் பந்தைப் பிடிப்பதில் வாய்ப்பினைப் பெறுகின்றார்கள்.

கடைசியில் அதிகத் தடவை பந்தைப் பிடித்து அதிகமான வெற்றி எண்களைப் பெற்றிருக்கும் குழுவே வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும். அல்லது முதலில் 10 வெற்றி எண்களைப் பெற்றிருக்கிற குழுவே வெற்றி பெற்றதென்றும் அறிவிக்கலாம்.

30. பந்தைத் தொடு பார்ப்போம்!

(Centre Stride Ball)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

முதலில் அவர்களை கைகளைக் கோர்த்துக் கொண்ட ஒரு பெரிய வட்டமாக அமைத்து நிற்கச் செய்ய வேண்டும். பிறகு, கைகளை விட்டுவிட்டு தாங்கள் நிற்கின்ற இடத்தில் காலால் ஒரு சிறு வட்டம் போட்டுத் தங்களது நிற்கும் இடத்தையும் குறித்துக் கொள்ளவ் வேண்டும்.

வட்டத்தில் நிற்கும் மாணவர்களில் ஒருவரிடம் பந்து ஒன்றைத் தந்து ஆட்டத்தைத் தொடங்க செய்ய வேணடும்.