பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

55


வட்டத்தின் நடுவில் தொடும் ஆட்டக்காரர் (it) ஒருவரை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலித்தவுடன், பந்தை வைத்திருக்கும் ஆட்டக்காரர்தன் எதிரில் நிற்கும் யாராவது ஒரு ஆட்டக்காரருக்கு பந்தை உருட்டி விட வேண்டும். அல்லது பந்தைத் தூக்கி எறிந்தும் வழங்கலாம்.

இவ்வாறு வழங்குகின்ற (Pass) பந்தை, நடுவில் நிற்பவர் பிடித்துக் கொள்வதற்கு முன் தொட்டுவிட்டால் பந்தைப் பிடிக்க இருந்தவர், பந்தைத் தொடுபவராக வட்டத்தின் நடுவில் வந்து நிற்க வேண்டும். பந்தைத் தொட்டவர் அவரது இடத்தில் போய் நின்று கொள்வார்.

குறிப்பு: நடுவில் நிற்பவர் பந்தைத் தொடாதவாறு

அல்லது பிடித்து விடாதவாறு பந்தை உருட்ட வேண்டும். அல்லது எறிய வேண்டும். நடுவில் உள்ளவரை ஏமாற்றி ஆடுவதில்தான் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதால் தொடுபவரைக் கவனித்து அவர் கையில் பந்து சிக்காமல் எறிய வேண்டும். -

ஆட்டக்காரர்கள் சுறுசுறுப்புடனும் எச்சரிக்கை யுடனும் நின்று ஆட வேண்டியது மிகமிக முக்கியமான குறிப்பாகும்.

31. நகரும் சிலை

(Advancing Statue)

ஆட்ட அமைப்பு: ஒரு வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஆட்டக்காரர்களாக இருந்து ஆடச் செய்யலாம். பயன்படுத்தக்கூடிய ஆடுகளத்தில் 30 சதுர கெஜ பரப்பளவினைக் குறித்துக் கொண்டு அந்த எல்லைக்குள்ளே ஆடச் செய்ய வேண்டும்.