பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


இரண்டாவது குழுவில் உள்ள ஆட்டக்காரர்களை வட்டத்திற்குள்ளே நிற்கச் செய்ய வேண்டும்.

ஆடும் முறை: பிறகு, வட்டத்தில் நிற்கும் ஒருவரிடம் பந்தைக் கொடுத்து, உள்ளே நிற்கும் ஆட்டக்காரர்களை நோக்கிப் பந்தால் அடிக்கச் சொல்ல வேண்டும். அவரும் எதிர்க்குழு ஆட்டக்காரர்களை நோக்கிக் குறி பார்த்து அடிக்க வேண்டும். எதிர்க்குழுவினர் பந்தில் அடிபடாமல் தப்பித்து ஓடுவார்கள். அடிப்பட்டவர்கள் ஆட்டத் திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். -

குறிப்பு: பந்தால் அடிப்பவர்கள் வட்டத்திற்கு வெளியே இருந்தவாறுதான் பந்தை எறிந்து அடித்தாட வேண்டும். - -

இடுப்பிற்குக் கீழே ஆட்டக்காரர்கள் மேல் பந்து பட்டால்தான் ஆட்டமிழப்பார்கள் (out). சில சமயங்களில் முழங்கால்களுக்குக் கீழே பந்து பட்டால்தான் ஆட்ட மிழப்பார்கள் என்று விதிமுறைகளை அமைத்துக் கொண்டும் ஆடுவதுண்டு.

33. சரக்கு வண்டி

(Luggage van)

ஆட்ட அமைப்பு: 20அல்லது 40 பேர்களை வைத்துக் கொண்டு, இந்த ஆட்டத்தை ஆடலாம். -

இருக்கின்ற ஆட்டக்காரர்களை 4 சம எண்ணிக்கை யுள்ள குழுவினர்களாக முதலில் பிரித்து நிறுத்தி வைக்க வேண்டும். -

ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு குழுத்தலைவன் உண்டு. குழுத்தலைவன் முன்னே நிற்க,