பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

59


அவன் பின்னே நின்று ஒருவர் இடுப்பைப் பிடித்துக் கொள்ள, அதுபோல அக்குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒருவர் இடுப்பை ஒருவர் பற்றியவாறு ரயில் வண்டியில் பெட்டிக் கோர்த்து நிற்பது போல நிற்க வேண்டும்.

இதுபோல், மூன்று குழுக்களும் ரயில் பெட்டி (Train) போல நீண்டு, 4-வது குழுவும் ரயில் பெட்டி போல இடுப்பைப் பற்றிக் கொண்டு நிற்க வேண்டும். இதற்கு சரக்கு வண்டி என்று பெயர். -

மூன்று ரயில் வண்டிக் குழுவினர்கள் ஆங்காங்கே தூரமாகத் தள்ளி நின்று கொண்டிருப்பார்கள். சரக்கு வண்டி குழுவினரை மட்டும் தனியே ஒரிடத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். -

ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது. சரக்குவண்டிக் குழுவில் உள்ள முதல் ஆட்டக்காரர் (குழுத் தலைவன்) தன் குழுவினரை இணைத்துக் கொண்டு மற்ற ரயில் வண்டிக் குழுவில் உள்ள கடைசி ஆட்டக்காரரை நோக்கி ஓடி அவரது இடுப்பில் கைகோர்த்துத் தன் வண்டியை இணைத்துவிட முயல வேண்டும்.

மற்ற ரயில் வண்டிக்காரர்கள், தங்கள் குழு கடைசி ஆட்டக்காரரை சரக்கு வண்டியினர் வந்து தொட்டு விடாமல் தடுப்பதற்காக அங்குமிங்கும் ஓடி தப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.

குழுத் தலைவன் ஓடுகிற பக்கமே மற்ற ஆட்டக் காரர்களும் அவரவர் பிடித்திருக்கும் இடுப்பின் பிடியை விட்டுவிடாதவாறு தொடர்ந்து ஒட வேண்டும். ரயில் வண்டிக்காரர்கள் வளைந்து ஓடியும், நெளிந்தும் தொடப் படாமல் தப்பித்துக் கொண்டு ஓடிவிட முயற்சிப்பார்கள்.