பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

61


மற்ற ஆட்டக்காரர்களை எல்லாம் புரட்சிக்காரர் (Rebels) என்று குறிப்பிட்டு, அவர்களை மைதானம் முழுவதும் பரவி நிற்பது போல நிற்கச் செய்ய வேண்டும்.

ஆடும் முறை: புரட்சிக்காரர்களை சோதனை செய்வதற்கென்று மன்னர் தன் மெய்க்காப்பாளர்களுடன் புறப்பட்டுச்செல்ல வேண்டும். புரட்சிக்காரர்கள்அருகில் வந்து மன்னரைத் தொட முயற்சி செய்வார்கள்.

மன்னரை யாரும் தொடாதவாறு மெய்காப்பாளர்கள் முயற்சி செய்து தடுக்க வேண்டும்.தடுப்பதையும் மீறி யாராவது மன்னரைத் தொட்டுவிட்டால், தொட்டவரை விரட்டிக் கொண்டு மெய்காப்பாளர்களில் யாராவது ஒருவர் ஓட வேண்டும். (இரண்டு பேர் தொட்டால் ஆளுக்கொருவரை விரட்டிக் கொண்டு ஓடலாம்.)

விரட்டப்பட்டு ஓடுகிற புரட்சி ஆட்டக்காரர் மெய்க்காப்பாளரிடம் சிக்கிக் கொள்ளாமல் அதாவது தொடப்படாமல், மன்னருக்குரிய சிம்மாசனம் என்று கருதப்படுகிற வட்டத்திற்குள் சென்றுவிட்டால் அவரே சிம்மாசனத்தைக் கைப்பற்றியவராவர்.

அவர் மறு ஆட்டத்தின் தொடக்கத்தில் மன்னராக மாற ஆட்டம் மீண்டும் தொடரும்.

வட்டத்திற்குப் போவதற்குள் புரட்சிக்காரர் மெய்க் காப்பாளரிடம் சிக்கிக் கொண்டால் அவர் அடுத்த மெய்க்காப்பாளராக மாற வேறொருவர் மன்னராக மாறி ஆட்டத்தை மறுபடியும் தொடர வேண்டும்.

35. மேல் கீழ் தொடரோட்டம்

(All up and down Relay)

ஆட்ட அமைப்பு:ஆட்டக்காரர்கள் 50 பேர்கள் வரை வைத்துக்கொண்டு ஆட்டத்தில் பங்கு கொள்ளச் செய்யலாம்.