பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆட்டத்திற்கு 20 இந்திய கரளா கட்டைகள்‌ (clubs)தேவைப்படுவதால்‌, முன்கூட்டியே எடுத்து வைத்துக்‌கொள்ள வேண்டும்‌.

ஆட்டக்காரர்களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுக்களாகப்‌ பிரித்து வைத்து, ஓடத்‌ தொடங்கும்‌ கோடு (Starting line) ஒன்றைப் போட்டு அதன் பின்னே ஒருவர் பின்‌ ஒருவராக (file) வரிசையாக நிறுத்தி வைக்க வேண்டும்‌.

5 அடி இடைவெளி தூரத்தில்‌ ஒவ்வொரு குழுவும்‌ நின்று கொண்டிருக்கும்‌. அந்தக்‌ குழுவிற்கு முன்புறமாக எதிரே 60 அடிதூரத்தில்‌ ஒவ்வொரு வட்டம்‌ போடப்பட்டு அதில்‌ 5 கரளா கட்டைகளை வைத்திருக்க வேண்டும்‌.

ஆட்ட ஆரம்பத்தில்‌ கரளா கட்டைகளைக்‌ கீழே போட்டிருக்க வேண்டும்‌.

ஆடும்‌ முறை: விசில்‌ ஒலிக்குப்‌ பின்‌ ஆட்டம்‌ ஆரம்பமாகிவிடுகிறது. ஒவ்வொரு குழுவின்‌ முன்‌ ஆட்டக்காரரும்‌ (ஓடத்‌ தொடங்கும்‌ கோட்டின்‌ அருகில்‌ நிற்கும்‌ முதல்‌ ஆட்டக்காரர்‌) வேகமாக, தங்கள்‌ குழுவிற்கு எதிரே இருக்கும்‌ கரளா கட்டைகளை நிமித்தி (up) நிற்க வைத்துவிட்டு ஓடி வந்து, தனக்குப்‌ பின்னால்‌ நின்று கொண்டிருக்கும்‌ ஆட்டக்காரரின்‌ கையைத்‌ தொட்டு விட்டு தன்‌ குழுவின்‌ பின்புறமாகப்‌ போய்‌ நின்று கொள்ள வேண்டும்‌.

தொடப்பட்ட அடுத்த ஆட்டக்காரர்‌ உடனே தங்களுக்‌குரிய வட்டத்திற்கு ஓடி, அங்கு நிமிர்த்தி வைக்கப்‌பட்டிருக்கின்ற கரளா கட்டைகளைக்‌ கீழே சுற்றிவிட்டு ஓடி வந்து, தனக்கு அடுத்து நின்றவரைத்‌ தொட்டுவிட்டு ஓடி, பின்புறமாகப்‌ போய்‌ நிற்க வேண்டும்‌.