பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

63


இவ்வாறு, கரளா கட்டைகளை ஒருவர் நிமிர்த்தி வைக்க, மற்றவர் கீழே தள்ளிவிட ஆட்டம் தொடரும். குழுவில் உள்ளவர் நிமிர்த்தியோ அல்லது கீழே தள்ளிவிட்டு வந்து ஓடத் தொடங்கும் கோட்டை முதலில் கடந்துவிடுகிறவரின் குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

குறிப்பு: ஓடுகிற வேகத்தில் கரளா கட்டைகளை வட்டத்திற்கு வெளியே தள்ளிவிட்டு வர அனுமதிக்கக் கூடாது. அவசரத்தில் வெளியே தள்ளிவிட்டாலும், அவரே ஓடிப்போய் எடுத்து ஒழுங்காக வட்டத்திற்குள் வைத்துவிட்டுத்தான் வர வேண்டும்.

கரளா கட்டையை நிமிர்த்தி நிற்க வைக்கும் வாய்ப்பினைப் பெறும் ஆட்டக்காரர் நிமிர்த்தி விட்டு வரும்போது விழுந்துவிட்டாலும் திரும்ப ஓடிச்சென்று நிமிர்த்தி வைக்கின்ற பொறுப்பு அவருக்குரியதாகும்.

ஆகவே, வேகமாக ஓடி ஆடினாலும், நிதானமாகவும் ஆட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. பொறுப்பேற்று ஆடுபவர் ஒருவராக இருந்தாலும் அவரது குழு தோல்வியடைகிறது என்பதையும் ஆட்டக்காரர்கள் மறந்துவிடக் கூடாது.

36. கயிறு தாண்டும் தொடரோட்டம்

(Rope Skipping Relay)

ஆட்ட முறை: ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுவினர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒடத்தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டு, அதற்குப் பின்னே (அவர்களை) ஒவ்வொரு குழுவையும் வரிசையாக நிறுத்தி வைக்க வேண்டும்.