பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


நான்கு குழுவினரும் நிற்பதற்கு நேராக 50 அடி தூரத்தில் முன்புறமாக ஒரு வட்டம் போட வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் நேராக ஒவ்வொரு வட்டமும் இருக்க வேண்டும். அந்த வட்டத்தில் 7 அல்லது 8 அடி நீளமுள்ள கயிறு (Skipping rope) வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒவ்வொரு தாண்ட உதவும் கயிறு இருக்க வேண்டும். கயிறை வைத்துத்தான் ஆட்டமே நடக்கிறது. - - * * -

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவின் முதல் ஆட்டக்காரரும் வட்டத்தை நோக்கி ஓடி வட்டத்திற்குள்ளே நின்று கயிற்றினை எடுத்து 10 முறை தாண்டிக் குதித்துவிட்டு, அதை வட்டத்திற்குள்ளேயே போட்டு விட்டு, தன் குழுவை நோக்கி ஓடி வந்து, தனக்கு அடுத்து நின்றவரைத் தொட்டுவிட்டு, பிறகு போய் தன் குழுவின் பின்புறத்தில் நின்று கொள்ள வேண்டும்.

தொடப்பட்ட ஆட்டக்காரர் தன் குழுவிற்குரிய, வட்டத்திற்கு ஓடிப்போய், முன் ஆட்டக்காரர் செய்தது போல செய்துவிட்டுத் திரும்பி வர வேண்டும்.

இவ்வாறு, எல்லாக் குழுவிலும் உள்ள கடைசி ஆட்டக்காரர்களில் யார் முதலாவதாக செய்துவிட்டு, ஓடத் தொடங்கும் கோட்டை வந்து கடந்து நிற்கிறாரோ அவரது குழுவே வென்றதாக அறிவிக்கப்படும்.

இதை இன்னொரு முறையாகவும் ஆடலாம்.

ஒவ்வொரு வட்டத்திலும் கயிற்றினை வைப்பதற்குட் பதிலாக, முதலாவதாக நிற்கும் ஆட்டக்காரரிடம் கொடுக்க வேண்டும். விசில் ஒலிக்குப் பிறகு ஓடத் தொடங்கும் கோட்டிலிருந்து கயிற்றைத்தாண்டிக் குதித்துக் கொண்டே ஓடி 50 அடி தூரத்தில் குறித்துள்ள கோட்டைக் கடந்து விட்டு மீண்டும் தன் குழுவை நோக்கி ஓடி வந்து, தனக்கு