பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

65


அடுத்து நின்றவரிடம் கொடுத்து ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: ஓடத் தொடங்கும் கோட்டை நன்றாக முழுதும் கடந்த பிறகே திரும்பி வந்து அடுத்த ஆட்டக்காரரைத் தொட வேண்டும்.

37. உருட்டுப் பந்தாட்டம்

(Ball Roll Relay)

ஆட்ட அமைப்பு: தொடரோட்ட முறை (Relay) ஆட்டத்தில் முன்னர்கூறியிருப்பது போல, 4 குழுக்களாக ஆட்டக்காரர்களைப் பிரித்துக் கொண்டு, ஒடத் தொடங்கும் கோட்டின் முன்னே நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்கும் நேராக 50 அடிதுரத்தில் ஒடி முடிக்கும் கோடு (Finishing Line) ஒன்றையும் போட்டு வைத்திருக்க வேண்டும்.