பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஒவ்வொரு குழு முதல் ஆட்டக்காரரிடமும் ஒரு பந்தை தந்து வைத்திருக்க வேண்டும்.

ஆட்டமுறை:’ அனுமதி விசில் ஒலி மூலம் கிடைத்த பிறகு, பந்தை வைத்திருக்கும் முதல் ஆட்டக்காரர்கள், தங்கள் கையில் உள்ள பந்தைத் தரையில் கையால் உருட்டிக் கொண்டே, வந்து ஓடத் தொடங்கும் கோட்டைக் கடந்ததும், தனது இரண்டாவது ஆட்டக்காரரிடம் தந்துவிட்டு, குழுவின் கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இதேபோல் அடுத்த ஆட்டக்காரரும் செய்வார். இவ்வாறாக எந்தக் குழுவின் கடைசி ஆட்டக்காரர் பந்தை (கையால்) உருட்டிக் கொண்டே வந்து முதலில் முடிக்கிறாரோ அவரது குழுவே வென்றதாக அறிவிக்கப்படும்.

குறிப்பு: காலால் பந்தை உதைக்கக் கூடாது. ஒரு கையால்தான் பந்தை உருட்டிக் கொண்டு ஓட வேண்டும்.

38. தறி ஓட்டம்

(Shuttle Relay)

ஆட்ட அமைப்பு: ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை 10 மாணவர்கள் ஒரு குழுவில் என்று, நான்கு குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, ஓடத் தொடங்கும் கோடு, முடிவெல்லைக் கோடு என்று 50 கெஜ தூரத்தில் இரண்டு கோடுகளைப் போட வேண்டும்.

ஓடத் தொடங்கும் கோட்டில் 5 பேர், முடிவெல்லைக் கோட்டில் 5 பேர் என்று ஒவ்வொரு குழுவையும் இரண்டு