பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

67


பிரிவாகப் பிரித்து, நேர்நேராக நிற்பதுபோல நிறுத் வைக்க வேண்டும். -

நிற்பவர்கள் கோட்டிற்குப் பின்னால்தான் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை: ஓடத் தொடங்கும் கோட்டிலிருந்து தான் ஓட்டத்தைத் தொடங்க வேண்டும். விசில் ஒலிக்குப் பிறகு, குழுவின் முன்னாட்டக்காரர் வேகமாக ஓடி, 50 கெஜ தூரத்திற்கு அப்பால் நிற்கும் தன் குழு ஆட்டக் காரரைப்போய் தொட்டுவிட வேண்டும். தொடப்பட்டவர் அங்கிருந்து ஓடிவந்து இந்தக் கோட்டில் உள்ளவரைத் தொட வேண்டும். இவ்வாறு மாறி மாறி ஓடி வந்து தொட, கடைசி ஆட்டக்காரர் வேகமாக ஓடிவந்து எல்லைக் கோட்டைக் கடந்து விட வேண்டும்.

முதலில் ஓடி முடிக்கும் குழுவே வென்றதாகும். குறிப்பு:துணி நெய்யும்போது தறிக் கட்டையானது இங்குமங்கும் வேகமாக நூல்களுக்கிடையே ஓடி வருவது