பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


போல, ஒட்டக்காரர்களும் இங்குமங்கும் ஒடி ஒட்டத்தை முடிப்பதால் இதற்குத் தறி ஓட்டம் என்று பெயர் தந்திருக்கிறோம். - -

எல்லைக் கோட்டைக் கடந்த பிறகுதான், தன் குழு ஒட்டக்காரரைத் தொட வேண்டும். கோட்டுக்கு முன்னே வந்து நின்று கொண்டு ஒட முயற்சிக்கக் கூடாது.

தன்னைத் தொடும்வரை கோட்டிற்குப் பின்னால் நின்று கொண்டிருக்க வேண்டுவது ஒவ்வொரு ஆட்டக் காரரின் கடமையாகும். விதிகளை மீறி ஆடினால், அந்தக் குழுவே ஆட்டமிழக்க நேரிடும்.

39. மூன்று கால் தொடரோட்டம் (Three Legged Relay)

ஆட்ட அமைப்பு: எல்லா தொடரோட்டத்திற்கும் (Relay) உள்ள அமைப்புபோல்தான் இந்த ஆட்டம் என்றாலும், இது சற்று மாறுபட்ட ஆட்டமாகும்.