பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


கோட்டின் பின்னே, ஒருவர் பின் ஒருவராக குழுக்களை நிற்க வைக்க வேண்டும். 60 அடி தூரத்தில் ஒரு எல்லையைக் குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு முதலில் நிற்கும் ஆட்டக்காரர்கள் ஓடி எல்லை வரை சென்று அதைக் கடந்து விட்டுத் திரும்பி வந்து, தனக்கு அடுத்து நின்றவரைத் தொட்டுவிட்டுத் தன் குழுவின் பின்னால் போய் நின்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு, குழுவில் உள்ள எல்லா ஆட்டக்காரர்களும் ஒடி முடித்த பிறகு எந்தக் குழுவின் கடைசி ஆட்டக்காரர் ஓடத் தொடங்கும் கோட்டை முதலில் வந்து முடிக்கிறாரோ அவரது குழுவே வெற்றி பெற்றதாகும்.

41. ஆள் திரட்டும் ஆட்டம்

(Over the Border Relay)

ஆட்ட அமைப்பு: மாணவர்கள் அனைவரையும் நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுவினராக முதலில் பிரிக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவையும் ஒடத் தொடங்கும் கோட்டின் பின்னே வரிசைபடுத்தி ஒருவர் பின் ஒருவர் என்றவாறு நிறுத்தி விட வேண்டும்.

ஓடத் தொடங்கும் கோட்டிலிருந்து 20அடிதுரத்திற்கு அப்பால், ஒரு எல்லைக்கோட்டை அமைத்து ஒவ்வொரு குழுவின்தலைவனையும் (கேப்டன்) அந்தக் கோட்டிற்குப் பின்னால் அவரவர் குழுவிற்கு எதிர்த்தாற்போல் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடும் முறை: விசில் மூலம் சைகை கிடைத்த பிறகு ஆட்டம் தொடரும். ஒவ்வொரு குழுத் தலைவனும், தன்