பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

71


குழுவை நோக்கி ஒடிச் சென்று, முதலில் நிற்கும் ஆட்டக்காரர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடி வந்து, தான் நின்ற கோட்டுக்கு வந்து, அப்படியே நின்று கொள்ள வேண்டும். - -

இவ்வாறு, கூட வந்தவர் ஒடிப்போய் இன்னொரு வரை அழைத்து வந்து தான்தங்கிக் கொண்டு, வந்தவரை ஆள் அழைக்க அனுப்ப வேண்டும். -

இவ்வாறு எந்தக் குழு முதலில் தங்கள் குழு ஆட்டக்காரர்களை அழைத்து வந்து நிற்கும் கோட்டின் எல்லையில் சேர்க்கிறதோ, அந்தக் குழுவே வென்றதாகும்.

குறிப்பு: ஒரு குழுத் தலைவன் தனது முயற்சியைத் தொடர்ந்து, தன் குழு ஆட்டக்காரர்களைத் திரட்டிக் கொண்டு வந்து ஒரு எல்லையில் சேர்க்கும் தன்மையால் இதற்கு ஆள் திரட்டும் ஆட்டம் என்று பெயரிடப் பட்டிருக்கிறது.

42. நீளம் தாண்டும் போட்டி (Long Jump Relay)

ஆட்ட அமைப்பு: மாணவர்களை நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுவினராகப் பிரித்து நிறுத்தி, ஒடத் தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டு, அதன் பின்னே ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நிற்கச் செய்ய வேண்டும். -

ஆடும் முறை: முதலில் நிற்கும் ஆட்டக்காரர் இரு கால்களையும் சேர்த்து நின்ற நிலையில் இருந்து தாவிக் 35333, Gougèr(\lb. (Standing Long Jump)