பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

73


ஓடி எல்லையைக் கடந்து மறுபடியும் பின்புறமாகவே ஓடி வந்து, தனக்கு அடுத்து நின்ற ஆட்டக்காரரைத் தொட வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு ஆட்டக்காரரும் பின்புறமாகவே ஓடி, இறுதியில் எந்தக் குழுவின் கடைசி ஆட்டக்காரர் முதலில் ஓடிவந்து முடிக்கிறாரோ அக்குழுவே வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்பட்டு ஆட்டம் முடிவுறும்.

குறிப்பு: பின்புறமாகவே ஓடும்போது பின்புறம் திரும்பிப் பார்க்க முயலக்கூடாது. தன் குழு ஆட்டக்காரர் தன்னை வந்து தொட்ட பிறகே ஓட முயல வேண்டும்.

குறிப்பு: மேலே உள்ள ஆட்டங்கள் ஏழாம் வகுப்பிற்குரிய ஆட்டங்களாகும்.


44. இரட்டையர் ஆட்டம்

(Couple Tag)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள குழந்தைகளை முதலில் இருவர் இருவராகப் பிரித்து நிற்கச் செய்ய வேண்டும். அவர்கள் விளையாட இருக்கின்ற ஆடுகளப் பரப்பளவை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இருவர் இருவராகப் பிரிக்கப்பட்ட ஆட்டக்காரர்கள் அனைவரும், தங்கள் பாங்கரின் (Team mate) கைகளைக் கோர்த்துக் கொண்டு நிற்க வேண்டும். அவர்களில் ஒரு இரட்டையரை, விரட்டித் தொடுபவராகத் (it) தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.