பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலி மூலம் அனுமதி கிடைத்த பிறகு, விரட்டித் தொட முயற்சிக்க வேண்டும்.

தொடப்பட்ட இரட்டையர் விரட்டித் தொடுபவராக மாறிவிட, ஆட்டம் மீண்டும் தொடரும்.

குறிப்பு: இரட்டையர்கள் ஓடும்போது கைகளை விட்டுவிட்டு தனியே ஒடக்கூடாது. சேர்ந்து இணையாகவே ஒட வேண்டும்.

குறிப்பிட்ட எல்லையைக் (தாண்டி) கடந்தும் ஓடக்கூடாது.


45. குதிரை ஏற்றம்

(Mount Tag)

ஆட்ட அமைப்பு: ஏறத்தாழ 100 மாணவர்கள் வரையில் இந்த ஆட்டத்தில் பங்கு பெறச் செய்யலாம். இந்த விளையாட்டுக்கென்று ஒரு பெரிய சதுரப் பரப்பளவை கோடு போட்டுக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இருக்கும் மாணவர்களில் ஒருவரை, விரட்டித் தொடுபவராகத் (it) தேர்ந்தெடுத்து, மற்ற ஆட்டக்காரர்களை தப்பி ஓடும் ஆட்டக்காரர்களாக ஆக்கிவிட வேண்டும்.

ஆடும் முறை: ஆசிரியரின் அனுமதிக்குப் பிறகு, விரட்டித் தொடுபவர் தப்பி ஓடும் ஆட்டக்காரர்களை விரட்டித் தொட முயற்சிக்க வேண்டும்.

தப்பி ஒடுபவர்கள் முடிந்தவரை தப்பி ஒடலாம். இனிமேல் ஓட முடியாது. விரட்டுபவரிடம் சிக்கிக்கொள்வோம் என்ற நிலைமை வந்துவிட்டால், உடனே