பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


குறிப்பு: கைகோர்த்துக் கொண்டு விரட்டுகிற ஆட்டக்காரர்களில், கடைசியில் இருக்கும் ஒருவர் மட்டுமே (End players) தப்பி ஓடுபவரைத் தொட வேண்டும். நடுவில் உள்ளவர்கள் தொட்டால், அது சரியல்ல.

கைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கும் பொழுது தொட்டால்தான் தொட்டதாகக் கருதப்படும். சங்கிலித் தொடர் அறுந்து போகாமல் விரட்டித் தொட்டு ஆடவே ஆட்டக்காரர்கள் முயற்சி செய்து ஆட வேண்டும்.


47. தலைக்கு மேலே பந்தாட்டம்

(Arch Ball)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள மாணவர்களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுவினர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவர்களைத் தொடரோட்டப் போட்டி நிறுத்தி வைப்பது போல ஓடத் தொடங்கும். கோட்டிற்குப் பின்னே ஒவ்வொரு குழுவினரையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவின் முன்னால் நிற்கும் முதல் ஆட்டக்காரர்களுக்கு ஆளுக்கு ஒரு பந்தைக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களுக்கு எதிரே 50 அடி தூரத்தில் எல்லைக்கோடு ஒன்றையும் போட்டு வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை:விசில் ஒலிக்குப் பிறகு முதல் ஆட்டக்காரர் பந்தை எடுத்துக் கொண்டு எல்லைக்கோடு வரை சென்று அதனைக் கடந்த பிறகு திரும்பி வந்து, தான் முன்னே நின்ற அதே இடத்திற்கு வந்து நின்று கொண்டு,