பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


உள்ளே உள்ளவர்கள், எறிகின்ற பந்தை பிடித்து விட முயல்வார்கள். அவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் பந்தை எறிய வேண்டும்.

யார் கையில் பந்திருக்கும்போது, பந்தைப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்கள் வட்டத்திற்குள்ளே வந்து நின்று, பந்துபிடி ஆட்டக்காரராக ஆட வேண்டும்.

குறிப்பு: உள்ளே நிற்கும் ஆட்டக்காரர்கள் ஏமாந்து போகும் வண்ணம் ஏமாற்றி ஆடுவதில்தான் இந்த ஆட்டத்தில் சுவை இருக்கிறது.


49.வட்டத்தில் விரட்டல்

(Circle chase)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இந்த விளையாட்டில் ஈடுபடுத்தலாம்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விளையாடுவதற்குரிய இடப்பரப்பையும் அதிகமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் பெரிய வட்டம் ஒன்றைப் போட்டிருக்க வேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி, ஆட்டக்காரர்களை 10 அடிக்கு ஒருவராக இடைவெளிவிட்டு இருப்பது போல நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டக்காரர்கள் வட்டத்தைச் சுற்றியவாறு ஒட வேண்டும். ஓடும்போதே 10 அடி தூரத்திற்கு முன்னே ஒடிக் கொண்டிருப்பவரைத் தொட்டுவிட முயல வேண்டும். அதே சமயத்தில் தனக்குப் பின்னால் ஓடி வருபவரிடம் தானும் தொடப்படாதவாறு ஓட வேண்டும்.