பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

79


பிறரைத் தான் தொட்டாலும் அல்லது தன்னால் அடுத்தவர் தொடப்பட்டாலும், தொடப்பட்டவர் ஆட்டமிழந்துவிடுகிறார் என்பதே ஆட்டத்தின் நோக்கம் என்பதை மறந்துவிடக் கூடாது.

பிறரைத் தொடுவதற்கு வேகமாக ஓட வேண்டும். ஆனால் பிறர்தன்னைத் தொட வருகின்றார் என்பதற்காக தப்பித்துக் கொள்ளும் பொருட்டு வட்டத்தை விட்டு வெளியே அதிக தூரமும் ஒடக் கூடாது.

ஒருவர் ஓடி எத்தனை பேர்களை வேண்டுமானாலும் தொடலாம். தொடப்படுபவர்கள் ஆட்டமிழந்து போகிறார்கள் (out) என்பதால் மிகவும் எச்சரிக்கையாக ஆட வேண்டும்.


50. வந்தால் விரட்டுவோம்

(Signal Chase)

ஆட்ட அமைப்பு: விளையாட இருப்பவர்களை சம எண்ணிக்கையுள்ள இரு குழுவினராகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

80அடி தூரம் இடைவெளி இருப்பதுபோல இரண்டு எல்லைக்கோடுகளைப் போட்டு ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு கோட்டின்மேல் நிறுத்தி வைக்க வேண்டும்.

இரண்டு குழுவினரும் ஒரே திசையைப் பார்ப்பது போல்தான் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குழுத்தலைவன். ஒவ்வொரு குழுத் தலைவனிடம் ஒரு விசில் இருக்க வேண்டும். முன்புறமாகப் பார்த்து நிற்கும் குழு முதல் குழு (அ) என்றும், அவர்கள் முதுகுப் புறத்தைப் பார்த்து