பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்

நிற்கும் குழு இரண்டாம் குழு (ஆ) என்றும் பெயர் கொடுத்துவிட வேண்டும்.

ஆடும் முறை: பின்னால் நிற்கின்ற இரண்டாம் குழுத் தலைவன் (ஆ) தன்னிடமுள்ள விசிலை ஊத வேண்டும். உடனே, அவரது குழுவினர் 80 அடி தூரத்திற்கு அப்பால் நிற்கும் குழுவை நோக்கி ஓட வேண்டும்.

தன் குழுவிற்கு 6 அடி தூரத்திற்கு எதிர்க்குழுவினர் பக்கத்தில் வரும்போது, முதல் குழுவின் தலைவன் (அ) தன்னிடம் உள்ள விசிலை ஊத வேண்டும். உடனே இரண்டாம், குழு ஆட்டக்காரர்கள் தாங்கள் புறப்பட்ட இடத்தை நோக்கி (திரும்பி) ஓட வேண்டும்.

அவர்கள் நின்ற எல்லைக்கோட்டைப் போய் அடைவதற்கு முன், முதல் குழு ஆட்டக்காரர்கள் யார் யாரைத் தொடுகின்றார்களோ அவர்கள் எல்லாம் முதல் குழுவினருடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், முதல் குழுவினர் இரண்டாம் குழு அருகில் போக, அங்கிருந்து விசில் சத்தம் கேட்டுத் திரும்பி வர என்று ஒவ்வொரு குழுவிற்கும் 5வாய்ப்புகள் வருவதுபோல் ஆட வேண்டும்.

அந்த ஐந்து வாய்ப்புக்களில், எந்தக் குழுவில் அதிக ஆட்டக்காரர்கள் சேர்ந்திருக்கின்றார்களோ, அந்தக் குழுவினரே வெற்றி பெற்றவர்களாவார்கள்.