பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

83


53. தொட்டோடி வா

(Touch & Run)

ஆட்ட அமைப்பு: விளையாட்டில் பங்குபெற இருக்கும் மாணவர்களைசம எண்ணிக்கையுள்ள இரண்டு குழுவினர்களாகப் பிரித்து, அவர்களை 6 அடி தூரம் இடைவெளி இருப்பதுபோல இரண்டு வரிசையாக எதிரெதிர்பார்த்திருப்பதுபோல நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடும் முறை: அவர்கள் வரிசையாக நின்ற பிறகு, ஆசிரியர் சத்தமாக சற்று தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதைப்போய் தொட்டுவிட்டு வாருங்கள் என்று கூற வேண்டும்.

அந்தப் பொருள் மரமாகவோ, சுவராகவோ அல்லது கம்பமாகக்கூட இருக்கலாம்.

ஆசிரியரது அறிவிப்பைக் கேட்டவுடன் எல்லோரும் ஓடிப்போய் தொட்டுவிட்டு, உடனே தாங்கள் நின்று கொண்டிருந்த அதே இடத்திற்கு வந்து வரிசையாக நிற்க வேண்டும்.

எந்தக் குழு முதலில் தொட்டுவிட்டு வந்த பிறகும் வரிசைகலையாமல் அழகாக நிற்கிறதோ அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகும்.

இவ்வாறு பலமுறை செய்யச் சொல்லி, அவற்றில் அதிகமுறை வெல்லும் குழுவையே இறுதியில் வென்றதாகக் கூடி அறிவிக்கலாம்.