பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


54. தேடிப்பார்

(Tresure Hunt)

ஆட்ட அமைப்பு: பள்ளிக்கூடத்து மைதானத்தை மட்டுமல்லாமல் பள்ளிக்கூடம் முழுவதையும் கூட இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளையாட வரும் மாணவர்கள் அனைவரையும் சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைவனையும் நியமித்துவிட வேண்டும். தலைவனே தன் குழுவை வழி நடத்த வேண்டும். -

பதுக்கி வைத்திருக்கும் பொருள் ஒன்றைத் தேடிப் பிடிப்பதுதான் இந்த ஆட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக இந்த வழியாக போ, இங்கே தேடு, அப்படிச் செய், மரத்தில் ஏறு என்று பல கட்டளைகளைக் குறிக்கின்ற துண்டுத் தாள்களை ஆங்காங்கே ஆசிரியர் முன்கூட்டியே சென்று மறைத்து வைத்திருக்க வேண்டும். போகின்ற வழி தேட இருக்கின்ற இடம் என்பன போன்ற விவரங்களை சூசகமாக எழுதி வைத்து கடைசியாகப் பொக்கிஷம் போன்ற அந்தப் பொருளை எடுப்பதற்காக சுமார் 10 குறிப்புத் தாள்களை (Clues) வைத்திருக்க வேண்டும்.

ஒரு குறிப்புத்தாளை கண்டெடுத்த குழுவிற்கு 5 வெற்றி எண்கள் (Points) என்று கொடுத்துவிட வேண்டும். அதிகமான குறிப்புக்களை (Clue) எடுக்கின்ற குழுவே வெற்றி பெறுவதற்குத் தகுதியானதாகும்.

ஒவ்வொரு குறிப்புத்தாளையும் கண்டெடுத்த பிறகே, அடுத்ததற்குப் போக வேண்டும். எல்லோரும் கட்டுப் பாடாக முயற்சியுடன் தேட வேண்டும்.