பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

85


குறிப்பு: குறிப்புத் தாளைப் பற்றிய விவரத்தை மறைத்துக் குறிக்கும்போது, சுமார் 10 அடி பரப்பளவிற்குள்ளேதான் அது புதைக்கப்பட வேண்டும் அல்லது மறைக்கப்பட வேண்டும்.

குறிப்புத்தாளை மறைத்து வைக்க மரத்தின் பொந்து, அடிமரம், அல்லது அடர்த்தியான புதர் இடமாகப் பார்த்துத்தான் மறைத்து வைக்க வேண்டும்.

55. எல்லையைக் காப்போம்

(Holding the Line)

ஆட்ட அமைப்பு: ஆட வருகின்ற மாணவர்களை இரண்டு குழுவினர்களாக முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். 80 அடி இடைவெளி தூரம் இருப்பதுபோல இரண்டு கோடுகளை இருபுறமும் போட்டு, ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு கோட்டில் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல (நேர் எதிரே நிறுத்தல்) நிறுத்தி வைக்க வேண்டும்.

அவரவர்கள் நிற்கும் கோடு அவரவர் எல்லையாகும்.

ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது.

முதலில் ஒரு குழுவினர் இன்னொரு குழு நிற்கும் எல்லைக் கோட்டைப் போய் சேர்ந்து விட வேண்டும். அவர்கள் அவ்வாறு தங்கள் எல்லைக்கு வந்து சேராத வரை அடுத்த குழுவினர் நடு இடத்திற்கு வந்து தடுத்து நிறுத்த வேண்டும். - -

இதுபோன்ற முன்னேறும் செயலும் தடுக்கும்

காரியமும் என்ற போர் (Strபoole)ஒரு நிமிடம் நீடிக்க