பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


57. தெரு வீதி ஆட்டம்

(Streets and Alleys)

ஆட்ட அமைப்பு: மாணவர்களை சம எண்ணிக்கையுள்ள 4 குழுவினர்களாகப் பிரித்து வரிசையாக நிறுத்தி வைக்க வேண்டும். 4 குழுவிலும் வரிசையாக நிற்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பக்கவாட்டில் உள்ளவர்களோடு கைகோர்த்துக் கொண்டு நின்றால் அது தெரு (Street) போன்றதோர் அமைப்பினை உண்டாக்கும். பிறகு, இடதுபக்கம் திரும்பினால் அதாவது தன் குழுவில் இடம் வலம் உள்ளவர்களோடு கைகோர்த்து நின்றால் அது வீதி போல (Alley) அமைப்பினை உண்டாக்கும். இவ்வாறு மாறி மாறி நிற்பதுதான் வரிசையில் நிற்போரின் கடமையாகும்.

விரட்டுவதற்கென்று ஒருவரையும், தப்பி ஓடுவதற் கென்று ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆளுக்கொரு பக்கம் நிறுத்தி வைக்க வேண்டும். -

ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, விரட்டுபவர் (Chaser) தப்பி ஓட இருப்பவரை (Runner) விரட்டத் தொடங்குவார். முதலில் இட வலது குழுவில் உள்ளவர்களோடு கைகோர்த்து நிற்க வேண்டும். அந்தத் தெரு வழியேதான் விரட்டிப் பிடித்து ஓட வேண்டும்.

விரட்டுபவர் ஓடுபவரைத் தொடக்கூடிய நிலை வந்தால், உடனே மாறி நில்லுங்கள் என்று ஆசிரியர் ஆணையிடுவார். உடனே அவர்கள் வீதிபோல, தங்கள் குழுவில் இருபுறம் உள்ளவர்களோடு கைகோர்த்துக் கொள்ள உடனே அமைப்பு மாறி பாதையில்லாமல் போய்விடும். இவ்வாறு ஆசிரியர் அடிக்கடி மாறி நின்று ஆடுவதற்கான ஆணையிட்டுக் கொண்டே இருப்பார்.