பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

89


வரிசையில் நிற்கும் ஆட்டக்காரர்கள், ஆணையைக் கேட்டவுடன் உடனே அமைப்பை மாற்றி நிற்க வேண்டும்.

ஆட்டக்காரர்களும் அவர்களைச் சுற்றி சுற்றியேதான் ஓட வேண்டும். சேர்ந்திருக்கும் கைகளை விலக்கியோ பிரித்துக் கொண்டோ ஓட முயலக் கூடாது. மிகவும் கவனத்துடன் ஆடினால், ஆட்டம் சுவையாக இருக்கும்.

58. காலிடையே பந்து

(Tunnel Ball)

ஆட்ட அமைப்பு: வந்திருக்கும் மாணவர்களைச் சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுவினர்களாகப் பிரித்து, ஓடத் தொடங்கும் கோட்டிற்கு முன்னே வரிசையாக (File) நிறுத்த வேண்டும். அவர்கள் ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னே நிற்க வேண்டும். அவர்களுக்கு எதிரே 30 அடி தூரத்தில் ஓடி முடிக்கும் எல்லைக் கோட்டையும் போட்டிருக்க வேண்டும். -

வரிசையில் நிற்கும் ஆட்டக்காரர்கள், தங்கள் கால்களை அகலமாக விரித்து நின்று கால்களுக்கு இடையே சந்து (Tunnel) போன்ற அமைப்பினை உருவாக்கி இருக்க வேண்டும். -

ஒவ்வொரு குழுவின் கடைசி ஆட்டக்காரரிடமும் ஒவ்வொரு பந்து இருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, கையில் பந்தை வைத்திருக்கும் கடைசி ஆட்டக்காரர்கள், பந்தை எடுத்துக் கொண்டு எல்லைக் கோட்டுக்கு ஓடி அதைக்

கடந்து தன் குழுவினை நோக்கி திரும்பி ஓடிவந்து, தன் குழுவின் முன்னால் நின்று குனிந்து தன் கால்-