பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


களுக்கிடையே பின்புறமாகப் பந்தைச் செலுத்த வேண்டும்.

அவர்கள் அதேபோல் ஆட்டத்தைத் தொடருவார்கள்.

குறிப்பு:பக்கவாட்டில் இரட்டையர்கள் ஓடும்போது, எக்காரணத்தைக் கொண்டும் முதுகு இணைப்பு விலகவே கூடாது.

தங்கள் கையிலுள்ள கம்பினை அடுத்த இரட்டையரிடம் மாற்றும்போது கம்பு கீழே விழக்கூடாது.

ஓடத் தொடங்கும் கோட்டைக் கடந்த பிறகே, வைத்திருக்கும் கம்பினை மாற்ற வேண்டும்.

59. இரட்டையர் கம்பாட்டம்

(Siamese Twin Relay)

ஆட்ட அமைப்பு: தொடரோட்டத்திற்குரிய (Relay) 4 குழு அமைப்பு போல்தான் ஆனால் இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் இருவர் இருவராகச் சேர்ந்து முதுகும் முதுகும் ஒட்டியவாறு நிற்க வேண்டும்.

ஆடும் முறை: ஒவ்வொரு குழுவும் இவ்வாறு முதுகு ஒட்டிய இரட்டையராக நிற்க, ஓடத்தொடங்கும் கோட்டின் அருகில் நிற்கும் முதல் இரட்டையர் (pair) கையில் ஒரு கம்பு (stick) வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் கைகளைப் பிரிக்காமல் முதுகைப் பிரியாமல் பக்கவாட்டிலே நகர்ந்து 30 அடி தூரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் எல்லைக்கோட்டை ஓடி அடைந்து அங்கிருந்து திரும்பி வந்து, ஓடத் தொடங்கியக் கோட்டைக் கடந்து, தங்கள் கையிலுள்ள மூங்கில் கம்பினை அடுத்த இரட்டையருக்குத் தருவார்கள்.