பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

91


அவர்கள். அதேபோல் ஆட்டத்தைத் தொடருவார்கள்.

குறிப்பு: பக்கவாட்டில் இரட்டையர்கள் ஓடும்போது, எக்காரணத்தைக் கொண்டும் முதுகு இணைப்பு விலகவே கூடாது.

தங்கள் கையிலுள்ள கம்பினை அடுத்த இரட்டையரிடம் மாற்றும்போது கம்பு கீழே விழக்கூடாது.

ஓடத் தொடங்கும் கோட்டைக் கடந்த பிறகே, வைத்திருக்கும் கம்பினை மாற்ற வேண்டும்.

60. கம்பு தாண்டும் இருவர் ஆட்டம்

(Double stick Riding Relay)

ஆட்ட அமைப்பு: முன் ஆட்டம் போல்தான், 4 குழுவினர் இருவர் இருவராக நிற்க வேண்டும். இந்த ஆட்டத்தில் பின்புறமாக நிற்காமல் முன்புறமாகப் பார்த்தபடி நிற்க வேண்டும். -

ஒவ்வொரு குழுவிற்கும் நீளக்கம்பு (wand) ஒன்று கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் இருவர் இருவராக வரிசையாக ஆட்டக்காரர்கள் நிற்க, 40அடி துரத்தில் எல்லைக்கோடு ஒன்றையும் போட்டு வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: முதல் இரட்டையர் தான். கம்பை வைத்திருக்கும் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். கம்பின் முனையை இடது கையால் ஆளுக்கு ஒரு பக்கமாக இருபக்கமும் இரட்டையர்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

விசில் ஒலிக்குப் பிறகு, இருபுறமும் கம்பின் முனையைப் பிடித்திருக்கும் இரட்டையர், தங்கள்