பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

95


ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, முதல் ஒட்டக்காரர் நொண்டியடித்தவாறு ஒற்றைக்காலால் தாவித்தாவி ஓடி, எல்லைக்கோட்டைக் கடந்துவிட்டு, குழுவின் கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும். அவரும் அப்படியே ஓடி, தனக்கு அடுத்தவரை வந்து தொட வேண்டும்.

இவ்வாறு எந்தக் குழுவின் கடைசி ஆட்டக்காரர் முதலில் வந்து ஓடத் தொடங்கும் கோட்டைக் கடக்கிறாரோ, அவரது குழுவே வெற்றி பெற்றதாகும்.

63. முன்கால் பிடித்தோடும் ஆட்டம்

(Lame Duck Relay)

ஆட்ட அமைப்பு: முன் ஆட்டம் போலவே ஆட்ட அமைப்பு 4 குழுவினரையும் ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னே நிற்க வைத்தவுடன் ஆட்டம் தொடங்குகிறது.