பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

97


விசில் ஒலிக்குப் பிறகு, முதல் இரட்டையர் முன்னால் குனிந்தவர், அவர் பின்னால் நின்று கணுக்கால்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர் இருவரும் இரட்டையர் ஆவார்கள். அப்படியே ஊர்ந்து முன்னேறிச் சென்று எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்து, தனக்கு அடுத்து நிற்கும் இரட்டையரைத் தொட்டுவிட்டு, குழுவின் பின்னால் போய் நின்று கொள்ள வேண்டும்.

அடுத்த இரட்டையரும் அவ்வாறே செய்து ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

இவ்வாறு செய்து, முதலாவதாக வரும் கடைசி இரட்டையர் குழுவே வென்றதாகும்.

குறிப்பு: கணுக்கால் பிடியை விடவே கூடாது, குனிந்தவர் எக்காரணத்தை முன்னிட்டும் நிமிர்ந்து நடக்கக் கூடாது.

65. குனிந்தோடும் தொடரோட்டம்

(Low Bridge Relay)

ஆட்ட அமைப்பு: சம எண்ணிக்கையில் நான்கு குழுவினராக ஆட்டக்காரர்களைப் பிரித்துக் கொண்டு, ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நிறுத்தி வைக்க வேண்டும்.

20 அடி தூரத்தில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு ஆட்டக்காரர்களைக் கொண்டுபோய் நிறுத்தி, அவர்களுக்கு ஒரு நீண்டக் கம்பினைத் (Wand) தந்து, 4 அடி உயரத்தில் இருக்குமாறு பிடித்துக் கொண்டு நிற்குமாறு செய்ய வேண்டும்.