பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்
 


தென்புறத்தும் திருமூலரை மேற்புறத்தும் சட்ட முனிவரைக் கீழ்ப்புறத்தும் அனுப்பி வைத்தாரென்பது தாசரின் கூற்று, (அலாய்சியஸ் I 601). “பஞ்சலியார் ஞானம்” எனும் நூலிலிருந்து இக்கருத்தைச் சொல்லும் பாடல் மேற்கோளாகத் தரப்படும்.

ஆசியாக் கண்டம் முழுவதும் பெளத்தம் பரவியிருந்த காலத்தில் புத்தரையே சிவனென்றும் சிவகதி நாயகன் என்றும் கொண்டாடி வந்தார்களென்றும் மக்களுள் காம, வெகுளி, மயக்கங்களாம் முக்குற்றங்களையும் அகற்றி அன்பைப் பெருக்கி இறவா நிலையாகும் நிர்வாணத்தை அடைகின்றவன் சிவன் என்றும் சிவகதி அடைந்தோனென்றும் கருதப்படுவான் என்றும் கூறும் தாசர் திருமூலரின்

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்த பின்

அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே (அலாய்சியஸ் I 561)

எனும் பாடலைப் பயன்படுத்திக் கொள்ளக் காணலாம்.

குண்டலி நாடியின் பெருமையைப் பேசும்போது

அற்றார் பிறவி அவரிரு கண்களை

வைத்தார் புருவத்திடையே நோக்கி

ஒத்தேயிருக்க உலகெல்லாம் தெரியும்

எக்காலும் சாவில்லை இறையவாமே (அலாய்சியஸ் I 553)

என்ற பாடலும், மலர்மிசை ஏகினவன் புத்தன் என்பதற்குக்

கடந்து நின்றான் கமலா மலர் மீதே (அலாய்சியஸ் (I 571)

என்ற பாடலும் அறவாழி அந்தணன் புத்தன் என்பதற்கு,

அருமை வல்லான் கலைஞாலத்துள் தோன்றும்

பெருமை வல்லான் பிறவிக் கடல் நீந்தும்

உரிமை வல்லான் அடியூடுர வாகி

திருமை வல்லா ரொடுஞ் சேர்ந் தன்னியானே (அலாய்சியஸ் II 576)

என்ற பாடலும், மேற்கோள்களாகும்.

புத்தரின் மும்மொழிகளும் மும்மொழிகளைத் தழுவிய நான்கு வேதவாக்கியங்களும் முதல் நூலென்றும் திருக்குறள் வழி நூலென்றும்