பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 133


“மனு நெறி” எனும் தொடருக்குத் தாசர் மனுக்களாகிய மனிதர்களுக்குரிய நெறியென்றே பொருள் கூறுவது நோக்கற்பாலது.

இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டு

இருவரும் பொருந்த உரையராயின்

மனு நெறிமுறையால் வழுத்துதல் நன்று

எனும் பாடலுக்கு

நியாயாதிபதியானவன் வாதிப் பிரதிவாதி யிவர்களின்

வார்த்தைகளை எழுதரம் மடக்கி விசாரித்து யதார்த்த

மொழி கண்டு நீதியளித்தல் வேண்டும்

என்றும்,

மனு நெறிமுறையின் வழக்கிழந்தவர் தாம்

மன மறவுறுகி யழுத கண்ணீர்

முறையுறத் தேவர் முனிவர்க் காக்கினும்

வழிவழி ஊர்வதோர் வாளாகும்மே

எனும் பாடலுக்கு,

அங்ஙனம் மனுக்களுக்காய நியாய நெறி வழுவி கெடு நீதி உரைத்து விடுவானாயின் அந்நியாய மடைந்தோன் தான் அடைந்தக் கேட்டை முனிவரிடத்தேனும் தேவரிடத்தேனும் அழுது முறையிடுவானாயின் அம்முறைப்பாடு பொய்ச்சான்று கூறியவன் சந்ததியையும் அநியாயம்யளித்தவன் சந்ததியையும் விடாமல் வாள் போன்று அறுத்து வரும்.

என்றும் பொருள் தருவார்.

தாயுமானவர் சமண முனிவர்களில் ஒருவரென்றும் புத்த தருமப் பிரியரென்றும் தாசர் எழுதுவார்.

இத்தகைய சமண முனிவரின் தியானப் பாக்களுடன் சில நூதன மதத்தோர் தங்கள் மதக்கருத்துக்கு இயைந்தப் பாடல்களை இயற்றிப் பொன்னுடன் தரா கலந்தன போல் சேர்த்துக் கொண்டு தங்கள் மத நூலென மாறுகொளக் கூறி வருகிறார்கள் (அலாய்சியஸ் II 426).

தாயுமானவர் “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்” என்றும் “செங்கமல பீடமேல் கல்லாலடிக்கு வளர் சித்தாந்த மூர்த்தி முதலே” என்றும் “பந்தமெல்லாம் தீரப் பரஞ்சோதி நீ குருவாய் வந்த வடிவை மறவேன் பராபரமே” என்றும் கூறுவது அவர் வணங்கிய சற்குருவாம் புத்தரை மனத்தில் எண்ணியே என்பார் தாசர். “சைவ சமயமே சமயம் சமய வாதீதப் பழம் பொருள் கைவந்திடவும் அன்றுள்ளொளிக்