பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


ஆனால் இந்நோக்கம் அடிப்படையில் தவறானது என்பதை அயோத்திதாசர் சுட்டிக் காட்டுகிறார். சாதியாசாரங்களையும் சமயவாசாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாயின் அதனோடு பலர் சேர்ந்துழைக்கத் தாமும் பிறரும் தயாராயிருப்பதையும் அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புக்காக மட்டும் நான் பிராமன்ஸ்’ சங்கம் போராடுமென்றால் அது பயனற்றதென்பதையும் தாசர் தெளிவுபடுத்துவது உணர்ந்து பாராட்டத்தக்க நிலையாகும்.

இதே போல் டிப்பிரஸ்டு கிளாஸை(Depressed Classes) சேர்ந்தவர்களை உயர்த்தப் போகிறோமென்னும் சில மேட்டுக் குடியினர் முன்வந்த போதும் அவர்கள் உள்நோக்கம் என்னவென்பதை அறிவிக்குமாறு தாசர் கேள்வி யெழுப்பினார். பரோடா மன்னர் தமது நாட்டில் கனத்திலும் தனத்திலும் தாழ்ந்தவர்கள் உயர வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்பின் மிகுதியால் ஏழைகளுக்குக் கலாசாலைகளும் கைத்தொழில் சாலைகளும் அமைக்க உதவி செய்தபோது அவரைப் பாராட்டிய தாசர், தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்டோரை மேலே கொண்டு செல்வோம் என்று முன்வருபவர்கள் யாரை எப்படி ஏமாற்ற முயலுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்.

இதற்காதரவாக இம்மாதம் ஆறாம் தேதி சனி வாரம் வெளிவந்த சென்னை சுதேசமித்திரன் பத்திரிகை நான்காம் பக்கம் நான்காவது கலத்தில் “கீழ் வகுப்பு சாதியாரை உயர்த்தல்” என்னும் காப்பிட்டு (பரித்பூர்) என்னும் தேசத்துள் கூடிய கூட்டத்தில் சில பிராமணர்கள் வந்திருந்து அவ்விடம் உள்ளோர்களைப் பார்த்து அன்னிய தேச சரக்குகளை பாய்காட் அதாவது “வர்ஜ்ஜனம் செய்வோர்களை உயர்த்தி விடுவதாகக் கூறினார்களாம். இதன் ஆதரவைக் கொண்டே சாதி பேதம் வைத்துள்ள கூட்டத்தார் தங்கள் சுதேசியக் கூட்டத்தை வலுச் செய்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தால் டிப்பிரஸ் கிளாசை சீர்படுத்தப் போகிறோமென வெளித் தோன்றியுள்ளார்களென்று கூறியுள்ளோம் (அயோத்திதாசர் I 204).

சாதிபேதமற்ற திராவிடர்கள் யாவரும் இக்கூட்டத்தினரின் எண்ணங்களை ஆராய்ந்தறியும்படி வேண்டிக் கேட்டுக் கொள்ளும் தாசர், முன்னடந்த வரலாற்று நிகழ்ச்சியொன்றை அவர்களுக்கு நினைவூட்டுவார்.

தற்காலம் பிராமணர்களென்று சொல்லிக் கொள்ளும்படியானவர்களுக்கும் கம்மாளர்கள் என்பவர்களுக்கும் சில கலகங்கள் நேரிட்டபோது பிராமணர்களென்போர் கம்மாளர்களுக்குப் பயந்து பறையர்கள் என்று அழைப்போர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு நீங்கள் வலங்கையர்கள், உங்களுக்கு சகல சுகங்களும் உண்டு, எங்களுடன் வலது