பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


சுப்பையா மனம் சலித்துக் கொள்வதோ, முகம் சுளிப்பதோ இல்லாததினாலேயே அவனுடைய வண்டி எவ்வித தங்குதடங்கலுமின்றிச் சென்று கொண்டிருந்தது.

சுப்பையா அங்கு வேலைக்கு வந்து பதினைந்து வருஷமாயிற்றென்றால், ராமசாமி அவனைவிட பத்து வருஷம் சீனியர். அந்த நீண்ட காலத்தில் அவர் தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, பல பிரமுகர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்று பலமான அஸ்திவாரமாகப் போட்டுக் கொண்டு விட்டவர்.

ஆகவே, 'ஹெட்குக்'கைப் பற்றித் தான் எந்த உண்மையான குறைகளையும் சொன்னால்கூட எடுபடாது என்பதை சுப்பையா வேலைக்குச் சேர்ந்த மாத்திரத்திலேயே தன்னுடைய விவேகத்தினால் புரிந்து கொண்டு, ராமசாமிக்கு அனுசரணையாகவே பிழைக்கத் தெரிந்து கொண்டு விட்டான். இதனால் ராமசாமிக்கும், சுப்பையாவிடம் ஒரு அலாதியான ஈடுபாடு.

"நான் இங்கு வேலையை விடும்போது, உன்னைத்தான் என்னுடைய 'ஹெட்குக்' ஸ்தானத்தில் வைத்து விட்டுப் போவேன்"என்று அடிக்கடி கூறுவார்.

தான் சொன்னபடி ராமசாமி செய்வாரோ செய்யமாட்டாரோ, அந்த ஆறுதலான வார்த்தையும், நன்றியுணர்தலும் சுப்பையாவுக்கு மிகவும் தெம்பை ஊட்டின. அதைப் பற்றி அவன் மனம் ஒவ்வொரு சமயம் கனவுகள்கூடக் காண்பதுண்டு.

திடீரென்று 'டைனிங் ஹாலில்’ ஏற்பட்ட மாணவர்களின் ஆரவாரமும், மேஜை நாற்காலிகளின் ஓசையும் சுப்பையாவின் பணியைத் துரிதப்படுத்தின.

ஏற்கனவே சுப்பையா டேபிள்களில் இலையைப் போட்டு, டம்ளரில் தண்ணிர் வைத்து விட்டான். பரிமாறுவதற்குத்