பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


"சோற்றை அள்ளி வாயிலேபோட்டா, கல்லும் மண்ணும் பல்லை உடைக்குது. எங்க வயிறு என்ன, கல்லு-உடைக்கிற மிஷனா?" -கண்ணனும் தன் பங்கை விட்டு வைக்கவில்லை.

சண்டை களை கட்டி விட்டது என்பதை உணர்ந்து கொண்ட மூர்த்தி இப்போது எழுந்து நின்று கொண்டு பேசினான்.

"நண்பர்களே, வீண் பேச்சு எதுவும் வேண்டாம். நீங்கள் அமைதியாயிருங்கள். நான் பேசிக் கொள்கிறேன்.” என்று நண்பர்களை நோக்கிக் கூறிவிட்டு, சுப்பையாவின் பக்கம் திரும்பி, "சுப்பையா இன்றையச் சாப்பாடு வெகு மோசமாக இருக்கிறது. எங்களுக்கு வேறே சாப்பாடு போடப் போகிறாயா இல்லையா?" என்று கேட்டான்.

சுப்பையா பொறுமையுடன், "இங்கே இருக்கிறது இந்த ஒரே சாப்பாடுதான். இதைத்தான் எல்லோருக்கும் போட்டிருக்கேன். நீங்க எதையோ மனசிலே வெச்சுக்கிட்டு, எங்கிட்டே இப்படிக் கோரஸாக் கத்தறதினாலே என்ன பிரயோசனம்?" என்றான்.

"உங்கிட்டேக் கத்தாமே, பின்னே யார்கிட்டேப்போய் எங்களைக் கத்தச் சொல்லறே! நீ தானே எங்களுக்குச் சாப்பாடு போடறே?" என்றான் ரமேஷ் சூடாக.

"சாப்பாட்டை நான் எங்க வீட்டிலேயிருந்தா கொண்டுவந்து போடறேன்! உங்க ஹெட்'சாமான் வாங்கிப் போடறாரு; எங்க 'ஹெட்குக்' ஆக்கி வைக்கிறார். நான் அதை உங்களுக்கு 'சர்வ்' பண்ணறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்."

"சுப்பையா, சும்மா 'குக்கு, குக்கு’ன்னு பயமுறுத் தாதே. உங்க குக்குக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?