பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


மாசா மாசம் நாங்க சொளை சொளையாப் பணம் கட்டல்லே? சோத்துக்குப் பதிலா இப்படிக் கல்லையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டவா கொடுக்கறோம்?' என்ற கண்ணனின் கேள்வியைக் கேட்டதும் சுப்பையா லேசாகச் சிரித்தான்.

"தம்பிகளா, கல்லும் மண்ணுங் கூடச் கம்மாக் கிடைக்காது; காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்றான்.

உடனே ராஜு, "நாங்க ஒண்ணும் கல்லுக்கும், மண்ணுக்கும் பணம் கட்டலே சுப்பையா,; நல்ல சாப்பாட்டுக்குத்தான் பணம் கட்டறோம். அது எங்களுக்குக் கிடைக்கல்லேன்னா இப்படிக் கூச்சல் போடத்தான் செய்வோம்" என்றான்.

"ஓ! நீங்க கூச்சல் போட்டா, நல்ல சாப்பாடு வந்துடுமா, மந்திரத்திலே மாஞ்செடி முளைக்கிறாப்பலே. அடே, அப்ப ரொம்ப நல்லதாப் போச்சே! சாமான் வாங்க வேண்டாம்; சமைக்க 'குக்' வேண்டாம்; சர்வ் பண்ண இந்த சுப்பையாவாவது வேணுமா; இல்லே அதுவும் வேண்டாமா? எங்கே, எல்லோரும் ஜோராக் கூச்சல் போட்டு நல்ல சாப்பாட்டை வரவழைச்சுக் காட்டுங்க; உங்க மாயா பஜார் வேலையை நானும் பார்க்கிறேன்" என்று சுப்பையா கூறி முடிப்பதற்குள், மூர்த்திக்குப் பிரமாதக் கோபம் வந்து விட்டது.

"சுப்பையா, எங்களைக் கிண்டலா பண்ணறே?" என்று முறைத்துப் பார்த்தான்.

சுப்பையா அமைதியாக, "நான் உங்களைக் கிண்டலும் பண்ணல்லே, சுண்டலும் பண்ணல்லே. ஏதோ மாஜிக்லே மாங்காய் வரும்னு சொல்லுவாங்க? நீங்க சத்தம் போட்டே