பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


சாப்பாடு வரவழைப்போம்னு சொன்னீங்க. அதை நானும் பார்க்கக் கூடாதான்னு கேட்டேன் என்றான்.

உடனே ரமேஷ் தன் ஆட்காட்டி விரலை ஆட்டியபடி, "வித்தை காட்டறதுக்கு நாங்க ஒண்ணும் மந்திரவாதிங்க இல்லே! நாங்க இப்போ அதுக்காகவும் உங்கிட்டே வரல்லே. ஸ்டூடன்ஸ் கிட்டே மரியாதையா நடந்துக்க நீ முதல்லே கத்துக்கோ" என்று எச்சரித்தான்.

"ஓ! அப்படீங்களா! ஆனா...நான் படிச்ச பள்ளிக் கூடத்திலே எங்க வாத்தியாரு, எல்லார் கிட்டேயும், எல்லாரும் மரியாதையா நடந்துக்கணும்னுல்லே, சொல்லிக் கொடுத்திருக்காரு," என்றான்.

அத்தனை நேரம் அங்கு நடப்பவற்றையெல்லாம் ரசித்த படி வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஏதும் பேசாமல் இருந்த கணபதி சட்டென்று."ஏன் சுப்பையா, இப்போ நீ சொன்னியே, 'எல்லார் கிட்டேயும் எல்லாரும்...' அப்படீன்னா என்ன அர்த்தம்?" என்றான்.

உடனே சுப்பையா, "மத்தவங்களுக்கு மரியாதை கொடுத்தாத்தான், அவங்க கிட்டேயிருந்தும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும்னு அர்த்தம்" என்று விளக்கினான்.

உடனே ராஜு அலட்சியமாக உதட்டைப் பிதுக்கியபடி "ஆஃப்டர் ஆல், நீ ஒரு சர்வர்: எங்க சம்பளத்தில் பிழைக்கிற உனக்கு நாங்க ஏன் மரியாதை கொடுக்கணும்?" என்றான்.

"இதுக்கு நான் பதில் சொன்னா, உங்களுக்கு மண வருத்தம் ஏற்படும், 'ஆஃப்டர் ஆல் நீங்க ஒரு மரியாதை