பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


கறீங்க: உங்காலேஹாஸ்டலோட பேரே கெட்டுப் போச்சு." என்று குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போனான்.

அதற்கு சுப்பையா, "உங்களுக்கு இவ்வளவு தூரம் விஷயங்கள் எல்லாம் புரிஞ்சிருக்குன்னா உடனே இதைப் போய் மேலிடத்திலே புகார் பண்ணுங்களேன். அதை விட்டு விட்டு வீணாக நீங்க சில பேருங்க மட்டும் குரூப் சேர்ந்துக்கிட்டு, 'குக்' வீட்டுக்குப் போனப்புறம், என்கிட்டே வந்து கத்தி என்ன பிரயோசனம்" என்று கேட்டான்

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ரமேஷ் சுப்பையாவை இளக்காரமாக ஒரு முறை பார்த்தான். "ஏன் பர்ச் சேஸர் பார்த்தசாரதி,லீடர் பாபு,ஹெட்கிளார்க் ஏகாம்பரம் எல்லோரையும் கைக்குள்ளற போட்டுக்கிட்டிருக்கிற தைரியமா? இனிமே உங்க பாச்சா ஒண்ணும் பலிக்காது. மெஸ்ஸுக்கு சாமான் வாங்கப் போற பணத்திலே, கொள்ளையடிச்சு நீங்க எத்தனைபேரு பங்கு போட்டுக்கறீங்க என்கிற விஷயம் எங்களுக்குத் தெரியும். இனிமேலும் நாங்க சும்மா இருக்கப் போறதில்லே.

ஒண்ணுக்குப் பாதி சாமான் வாங்கறது! அதிலேயும் மட்டச் சரக்கா வாங்கி எங்க வயிற்றைக் கெடுத்தா நாங்க வாயை மூடிக்கிட்டு இருக்கணுமா?" என்றான்.

ரமேஷின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுப்பையாவுக்குக் கோபம் குமுறிக்கொண்டு வந்துவிட்டது. பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு அல்லவா? அதுவும் அபாண்டமாக, அவதூறாகத் தன்னைப்பற்றிப் பேசுவதை சுப்பையாவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும், சற்று அவன் தன்னை அடக்கிக் கொண்டே கூறினான்.

ஏனெனில் அவன் தன்னுடைய இத்தனை வருஷ அந்த மெஸ் அனுபவத்தில் பலதரப்பட்ட மாணவர்களைச் சந்தித்