பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருக்கிறான். பழகியிருக்கிறான் "எங்க வீட்டிலே கூடஎன்னை இப்படிக் கவனிச்சு, வற்புறுத்திச் சாப்பிட வைக்க மாட்டாங்க சுப்பையா; நீ எங்க அப்பா, அம்மா மாதிரி எங்களை கவனிச்சுக்கறே?" என்று புகழ்ந்து கூறிய மாணவர்களையும் பார்த்திருக்கிறான். இப்படித் துாற்றுகிற மாணவர்களையும் பார்த்திருக்கிறான். ஆனால் எது எப்படி இருந்தாலும், ஒரு விவகாரம் என்று வந்து விட்டால், அதில் மாணவர்கள் கட்சி தான் எடுபடும்; கடைசியில் சுப்பையா இப்படி நடந்திருக்கக் கூடாது என்கிற தீர்ப்பில்தான் வந்து முடிந்து அவன் அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதோடுதான் விவகாரம் முற்றுப் பெறுவது வழக்கம்.

ஆம்! என்ன இருந்தாலும், அவன் ஆஃப்டர் ஆல் ஒரு சர்வர்தானே என்கிற எண்ணம். அவன் கொட்டுகிற அன்பிற்கு விலை இல்லை; மதிப்பில்லை; அவன் தவறிப்போய் சிந்தி விடுகிற சில சொற்களுக்குப் பிரமாதமான விசாரணை உண்டு.

இந்த நிலையைக் கண்டு உள்ளூர மனம் வெதும்பிக் கொண்டிருந்த சுப்பையாவின் பொன் உள்ளத்தை, ரமேஷின் சுடு வார்த்தைகள் புண் படுத்திவிட்டன போலும். வார்த்தைகளும் அவனையறியாமல் சூடாகவே வந்து விட்டன. போலும்.

"இந்தாப்பா. தம்பிகளா, நான் இப்போ உங்களை யாரையுமே வாயை மூடிக்கிட்டிருக்கச் சொல்லலியே! ஏன்ன, அது உங்களாலேயே முடியாத விஷயம்.

ஆனா அதுக்காக உங்களுடைய உருட்டலையும் மிரட்டலையும் எங்கிட்டே வெச்சுக்க வேண்டாம். அதுக்கு நான் ஆள் இல்லே; வேணுமானா உங்க புகார்களையெல்லாம்பிரின்சிபால்கிட்டேப் போய்ச் சொல்லிக்குங்க," என்று கூறிவிட்டான்.