பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


அவ்வளவுதான் சுப்பையாவினுடைய வாயிலிருந்து இந்த ஒருவார்த்தை வரவேண்டுமென்றுதான் காத்துக் கொண்டிருந்தது போல் மூர்த்தி கோஷ்டியினர் பாதிச்சாப்பாட்டிலே ஆர்ப்பாட்டம் செய்தபடிக் கையைக் கழுவிக் கொண்டு எழுந்து விட்டனர். கூட்டமாக வந்து சுப்பையாவைத் தாக்க ஆரம்பித்தும் விட்டனர். தடுக்கவந்த கணபதிக்கும் இரண்டு கிடைத்தது.

"ஓ! அவ்வளவு தூரத்துக்கு உனக்கு தைரியம் வந்துட்டுதா? இந்தா வாங்கிக்கோ...இப்போ எல்லாத்தையும் சேர்த்து, நீயே முதல்வர் கிட்டேப் போய் புகார் பண்ணிக்கோ," என்று அவர்கள் கலைந்து செல்லும்போது கூறிய மூர்த்தியின் வார்த்தைகள் சுப்பையாவின் செவிகளில் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது.

அவனைச் சுற்றிலும், மேஜை, நாற்காலிகள், டபரா, டம்ளர்கள், இதர சாமான்கள் எல்லாம் ஹால் முழுவதும் தாறுமாறாகச் சிதறி இரைந்து கிடந்தன.

3.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்

"மாணவர்கள் பள்ளிகளில் எதைப்படிக்கிறார்கள், எதைப் படிக்கவில்லை என்று நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு நிபந்தனை; அசாதாரணச் சூழ்நிலையில் கூட அச்சமின்றி உண்மையைப் பின்பற்றுபவனே சிறந்த மாணவன்; உண்மையைப் பின்பற்றுபவனே ஆண்மை பெறுகிறான்?
-மகாத்மா காந்தி.

ஆகாயம் நிர்மலமாக இருந்தது! மரம் செடி கொடிகள் லேசாகத் தலையசைத்த வண்ணம் நிமிர்ந்து நின்றன. காணு