பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


மேலே பழி சுமத்தி வஞ்சம் தீர்த்துக்கிறீங்க. இதுவேணாம்; நல்லதில்லே; நான் அவ்வளவுதான் சொல்லுவேன்;” என்றான்.

கணபதியின் நீண்ட பேச்சு அங்கு எவர்களையும் சிந்திக்கத் தூண்டியதாகத் தெரியவில்லை. மாறாக, ரமேஷ் கணபதியைப் பார்த்து சற்று கோபமாகவே கூறினன்:

“கணபதி, நீ ஒண்ணும் எங்களுக்குப் புத்தி சொல்ல வேண்டாம். நாங்க உன் கிட்டே இங்கே உபதேசம் வாங்கிக்க வரல்லே’, என்ருன்.

கணபதியும் பதிலுக்கு, நானும், எதையும் உங்களுக்கு உபதேசம் பண்ணறதா எண்ணிச் சொல்லல்லே! அப்படியே பண்ணிலுைம், அதெல்லாம், உங்க காதிலே ஏருது என்கிற தும் எனக்குத் தெரியும். ஆனாலும், நண்பர்கள் என்கிற அளவில் என் மனதில் பட்டதைச் சொன்னேன்; நீங்கள் கேட்க மாட்டீர்கள்.

மூர்த்தி இந்தப் பதவியில் இருந்து ருசி கண்ட பூனையாகி விட்டான். அவனது செயலில், நடத்தையில், நம்பிக்கை இல்லாத மாணவர்கள்தான், இந்த முறை பாபுவைத் தேர்ந் தெடுத்திருக்கிருர்கள். மூர்த்தியை நான் வெறுக்கவில்லை; ஆனாலும் மூர்த்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, வீன க ஒரு கெட்ட காரியத்துக்கு விதை விதைக்க வேண்டாம் என்று தான் கேட்டுக் கொள்கிறேன்.

எழுச்சியுற்ற புதிய மாணவர் சகாப்தத்தின் பிரதிநிதி யாகப் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிருன்; அவன்மீது அவது,றுச் சேற்றை வாரி இறைக்க எண்ணும் உங்கள் சதித் திட்டம் ஈடேருது ரமேஷ்' என்ருன்.

து.

'பார்ப்போமா கணபதி, இதை ஒரு சவாலாக நாங்கள் ஏற்றுக் கொள்கிருேம். நாங்கள் மனசு வைத்தால் ஆகாதது ஒன்றுமில்லை. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.