பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


ஏனென்ருல் அவன் பக்கம், ந்தி இருக்கிறது, நேர்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது. ஆகவே நான் அவனை ஆதரித்துத்தான் பேசுவேன். ஆனால், என்னப் பார்த்துச் சொன்னீர்களே, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்று, அதைத்தான் நான் உங்களுக்கு விளக்கியாக வேண்டும்.

இந்தக் கணபதி, பாலுக்குக் காவலாக மட்டுமே இருக்க விரும்புபவன்; என்னுடைய மனம் எப்போதாவது கெட்டுப் போய், பூனைக்குத் தோழனுக உங்களுடன் இருக்க ஆசைப் பட்டால், முழுக்க முழக்க பூனைக்குத் தோழனுக இருப் பேனே தவிர-ஆளுல், அப்போதே-பாலக் காவல் காக்கிற தொழிலை விட்டுவிடுவேனே தவிர, உங்களைப்போல இரட்டை வேடம் போட்டு ஏமாற்ற எனக்குத் தெரியாது: அது என் விருப்பமுமல்ல; நான் வருகிறேன்,' என்ருன்.

கணபதி தன் மனதிலுள்ளதை யெல்லாம் கொட்டி விட்டுத் திரும்பும்போது ராஜூவும் ரமேஷாம் ஏகோபித்த குரலில், நீ வரவேண்டாம் கணபதி, அங்கேயே இரு. புதன்கிழமை நடக்கப் போகிற விசாரணைக் கூட்டத்திலே, பாபு எப்படி சரண்டர்’ ஆகி அவமானப்படப் போகிருன் என்று அவன் பக்கத்திலேயே நின்று கொண்டு பாரு, "குட்பை என்று கூறிய சொற்கள் அவன் செவிகளில் தெளிவாக விழுந்தது. ஆஒ ல் கணபதி அவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அந்த நீண்ட தென்னந் தோப்பை வேகமாகக் கடந்து சென்று கொண்டிருந்தான்.