பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நாய் வால்

'அறிவும் திறமையும் பெறுவது மட்டுமல்ல கல்வியின் கோக்கம். பிறருடன் ஒத்துவாழ நம்மைப் பக்குவப்படுத்துவதே அதன் முக்கிய நோக்கம்.”

-டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

கலைவாணர் நகர ஏழாவது கிராஸ் தெருவிலுள்ள ஸ்டாப் வந்ததும் பஸ்ஸிலிருந்து இறங்கிய கணபதி நேராக பாபுவின் வீட்டை நோக்கி நடந்தான்.

மாடிக்குச் சென்றபோது, பேசிக் கொண்டிருந்த பாபுவும், சேகரும் கணபதியைப் பார்த்துவிட்டு ஆர்வத் துடன் வரவேற்றனர்.

கணபதி வா...வா, நானும் பாபுவும் இப்ப உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்,' என்ருன் சேகர்.

, பேசிய வாய் மூடவில்லை, நீ வந்து விட்டாய்.’’ என்று பாபுவும் ஆமோதித்தான்.

ஆமாம் கணபதி

அப்படியா? என்ன விஷயம் பாபு?’ என்று கணபதி ஆவலோடு கேட்டான்.

'ஒன்றுமில்லை, முதலியார் தென்னந் தோப்புக்குள் நீ யும், மூர்த்தியும், ராஜூவும், ரமேஷாம், போனதையும், அங்கு ஏதோ, காரசாரமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததாகவும், நம்ம சுபாஷ் வந்து சொல்லிவிட்டுப் போனன்,' என்ருன் பாபு.